search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மருந்து கடத்தல்"

    அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் ஊடுருவல், போதை மருந்து கடத்தலை தடுப்பதற்காக சுவர் கட்டப்படும் நிலையில், போதை மாபியா பயன்படுத்திய 80 மீட்டர் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #US #Mexico
    நியூயார்க்:

    போதை மாபியா கும்பல் அதிகம் உள்ள மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை மருந்துகள் கடத்தப்படுவதாகவும், சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களை தடுக்கவும் எல்லையில் மிக நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க போலீசாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போதை மாபியா பயன்படுத்தி வந்த சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணத்தில் உள்ள சான் லூயிஸ் நகரில் பழைய ஓட்டல் ஒன்றின் அடியில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.



    சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கம் எல்லையை கடந்து மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் முடிகிறது. அந்த பழைய ஓட்டல் இருந்த கட்டிடத்தின் உரிமையாளர் சமீபத்தில் போலீசில் சிக்க, அந்த கட்டிடத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த சுரங்க விவகாரம் வெளியே வந்துள்ளது.

    இந்த சுரங்கத்தின் மூலம் போதை மருந்துகள் கடத்தப்பட்டு வந்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
    தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. #Drugsmuggling

    லிமா:

    தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க பெரு நாட்டில் கொலம்பியா எல்லையில் புதுமேயோ பகுதியில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்கான உத்தரவை பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஷ்காரா பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து எல்லையில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ராணுவ வீரர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கொலம்பியாவின் ராணுவமும், போலீசும் உதவி வருகிறது. போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 50 பேரை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Drugsmuggling

    ×